ஸ்ரீதேவி விஜயகுமார் என்பவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1992 ஆம் ஆண்டு எக்ஸாம் மாமா என்ற திரைப்படத்தில் தோன்றினார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கின்றார்.
இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் பிரபல நடிகை மஞ்சுளா ஆகியோரின் மூன்றாவது மகள் ஆவார். இவர் பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
குறிப்பாக இவர் தனுசு உடன் தேவதையை கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் பிறகு மாதவன் நடிப்பில் வெளியான பிரியமான தோழி திரைப்படத்தில் மாதவனுக்கு தோழியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.
இந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சினிமாவில் இவரை முன்னணி நடிகையாக பெயர் சொல்லும் வகையில் இவர் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவர் பலரும் யோகித்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.
இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும் இருக்கின்றார் திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்ட இவர் தற்போது சமீப காலமாக மற்ற நடிகைகளை போல் சமூக வலைதளங்களில் கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகின்றார்.
இந்த வகையில் தற்பொழுது சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை என்னுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருக்கின்றார் ஸ்ரீதேவி விஜயகுமார் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.