பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளராக கலந்து கொண்ட அமீர் பவானி பிக் பாஸ் வீட்டில் அமீருக்கு பவானி மீது காதல் மறந்தது தற்பொழுது காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் அமீர் காதலை மறுத்த பவானி பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் நிறைவடையும் தருணத்தில் இருக்கும் காதலை ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து ஆல்பம் பாடல்களில் நடித்து வந்தனர். இது இயக்குனர் H. வினோத் கண்ணில் பட்டு நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தில் வாய்ப்பளித்திருந்தார்.
பிக் பாஸ் பங்கேற்கும் அனைவருக்கும் ஏதாவது ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என எண்ணிக்கொண்டிருக்கும் நேரத்தில் அமீர் மற்றும் பவானி என்ற காதல் ஜோடிக்கு தமிழகத்தில் இருக்கும் முன்னணி நடிகரான அஜித்தின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது பெரும் வெற்றியென அவர்கள் மகிழ்ச்சியாக தெரிவித்து கொண்டு வருகிறார்கள்.அந்த திரைப்படத்திலும் காதல் ஜோடிகளாகவே நடித்து நல்ல வரவேற்பை பெற்றனர். இவர்களின் காதல் விஷயம் அறிந்த நடிகர் அஜித் சில அறிவுரைகளை கூறியுள்ளதாக சமீபத்தில் நடந்த நேர்காணலில் பவானி கூறி இருந்தார்.துணிவு படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பேட்டி கொடுத்து கொண்டு வருகிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அமீர் பவானி அளித்த பேட்டி ஒன்றில் இருவருக்கும் பிப்ரவரி 15ஆம் தேதி திருமணம் என கேள்வி கேட்கப்பட்டது. பவானி அப்படி ஒன்றும் இல்லை நான் சும்மாதான் அந்த தேதியை அப்டேட் கூறினேன். என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். திருமண நடக்கும்ஆனால் அது இப்போது இல்லை இப்போது தான் நாங்கள் படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்று அமீர் கூறி இருந்தார்.