இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் அவர்கள் தளபதி 67 படத்தில் நடித்த வருகிறார்.இந்த படம் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்டு தற்போது காஷ்மீரில் சூட்டிங் எடுக்கப்பட உள்ளது.தொடர்ந்து ரசிகர்கள் இந்த படத்திற்கான அப்டேட்டுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த வகையில் நேற்று முன்தினம் இந்த படத்தை யார் இயக்கப் போவது மற்றும் இந்த படத்தின் இசையமைப்பாளர்,ஒளிப்பதிவாளர்,சண்டை பயிற்சியாளர்,நடன பயிற்சி அவர்களின் பட்டியலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
7 ஸ்கிரீன் தயாரிக்கும் இந்த யார் யார் நடிக்கப் போகிறார் என்பதை நேற்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஸ்கின், கௌதம் மேனன் ஆகியோர்கள் இந்த படத்தில் நடிப்பார்கள் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்றாகும்.
துளி கூட யோசிக்க முடியாத அளவிற்கு இந்த படத்தில் பிரியா ஆனந்த,சாண்டி மாஸ்டர்,மேத்யூ தாமஸ் ஆகியோர்கள் பேர் இடம் பெற்று இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இதைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் திரிஷா நடிப்பது என்பது தெரிந்த ஒன்றாகும். திரிஷா அவர்கள் நடிகர் விஜய்யின் குருவி படத்தை தொடர்ந்து 14 வருடங்கள் கழித்து தற்பொழுது விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எந்த ஒரு நேர்காணலில் கலந்து கொண்டாலும் அவரிடம் கேட்கும் முதல் கேள்வி தளபதி 67 படத்தின் அப்டேட் தான் அந்த வகையில் கோயம்புத்தூரில் நடந்த ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் இடம் தளபதி 67 அப்டேட்டை பற்றி கேட்டுள்ளார்கள். அதற்கு அவர் பிப்ரவரி 1 2 3 குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இப்படி இருக்கும் நிலையில் தளபதி 67 படத்தின் ப்ரோமோ வீடியோ பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்தும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் இருக்காது அதனால் அவரிடம் இந்த படத்தில் நடிகர் விஜய் விற்கும் திரிஷாவுக்கும் இடையில் காதல இருக்குமா என்று கேட்டுள்ளார்கள் அதற்கு அவர் இருக்கும் என்றும் பதில் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.