நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் இணைந்துள்ளார்.தளபதி 67 படம் மூலமாக 14 வருடங்களுக்குப் பிறகு நடிகை திரிஷா விஜயுடன் நடிக்க இருக்கிறார்.
இவர்களைத் தொடர்ந்து நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த் பிரியா ஆனந்த் உள்ளிட்டவர் தளபதி 67 படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் அவர்கள் வாரிசு படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தில் நடிப்பதற்கான பூஜை டிசம்பர் மாதத்தில் போடப்பட்டது.
ஆனால் அந்த பூஜை சம்பந்தமான எந்த ஒரு புகைப்படமும் வீடியோவும் வெளியிடப்படவில்லை காரணம் நடிகர் விஜயின் வாரிசு படம் வெளிவந்த பிறகு அது சம்பந்தமான புகைப்படம் அப்டேட்டுகள் வெளிவரும் என தெரிவித்திருந்தனர்.
அந்த வகையில் பிப்ரவரி மாதம் ஆரம்பத்தில் இருந்து தளபதி 67 படத்திற்கான அப்டேட்டுகளை கொடுத்து வருகின்றனர். முதல் கட்டமாக இந்த படத்தின் பணியாற்றும் அனைவரின்பட்டியல்களை படத்தை தயாரிக்கும் 7 ஸ்கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து படத்தில் நடிக்கும் முக்கியமான கதாபாத்திரங்களில் பெயர்களையும் நேற்று முன் தினம் வெளியிட்டனர்.தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த கட்ட அப்டேட்டாக இந்த படத்திற்காக போடப்பட்ட பூஜையில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தற்போது பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படி இருக்கும் நிலையில் நடிகர் கமலஹாசனின் விக்ரம் படத்தைப் போல இந்த படத்திற்கும் ஒரு ப்ரோமோ வீடியோ இருக்கிறதாம். அந்த வீடியோவை வரும் மூன்றாம் தேதி வெளியிட இருப்பதாக தெரிய வருகிறது.
தொடர்ந்து படக்குழுவினர் தளபதி 67 படம் சூட்டிங் காக தனி விமானங்களில் காஷ்மீருக்கு சென்று உள்ளனர்.
இப்படி இருக்கும் நிலையில் தளபதி 67 படத்திற்கு அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்களை எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டு வருகிறார்கள்.