நடிகர் சூர்யா தமிழ்நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர்,தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் முன்னாள் நடிகர் சிவகுமாரின் மகனும் மற்றும் நடிகர் கார்த்தியின் அண்ணனும் ஆவார்.இவர் 2006 ஆம் ஆண்டில் நடிகை ஜோதிகாவை காதலித்து இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு தேவ், தியா என்ற குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்துக்கும் பிறகு தொடர்ந்து சூர்யா நடித்து வந்தார். ஆனால் சூர்யாவின் மனைவி ஜோதிகா படங்களில் நடிக்காமல் இருந்தார். இவர் 2015 ஆம் ஆண்டு 36 வயதினில் எனும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். அதை தொடர்ந்து நடிகை நயன்தாராவுக்கு இணையாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளிலே நடித்து வந்தார்.சூர்யா மற்றும் ஜோதிகா படங்களில் நடிப்பது தயாரிப்பது போன்ற வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் பிரபல தொகுப்பாளினி டிடி சூர்யா ஜோதிகா குறித்து ஒரு தகவல் ஒன்றை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.அவர் சூர்யா ஜோதிகாவை பற்றி கூறியது நடிகர் சூர்யா அவர்கள் தனது காதல் மனைவி ஜோதிகா பிறந்த நாளுக்காக சர்ப்ரைஸ் ஆக பல ஏற்பாடு செய்தியைப் பற்றி கூறியுள்ளார்.
அதாவது நடிகை ஜோதிகாவிற்கு நெருக்கமான பல நபர்களை தன் காதல் மனைவிக்காக பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்து வந்திருந்தார்.அது ஜோதிகாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக அளித்தது என்றும் அவர் தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் ஜோதிகாவின் பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்த அனைவரும் ஏன் சூர்யா இப்படி பண்ணிட்டீங்க? இனி இது போல் எங்கள் மனைவியும் பிறந்தநாளுக்கு நீங்கள் உங்கள் மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸில் பாதி கூட நாங்கள் செய்யாட்டி எங்களை வச்சு செஞ்சிருவாங்களே? உங்களால் நாங்கள் இப்படி மாட்டிக்கொண்டோம் என்று சூர்யாவிடம் கேலியாக தெரிவித்துள்ளனர். நடிகர் சூர்யா தனது காதல் மனைவி ஜோதிகா மீது அந்த அளவுக்கு பாசம் வைத்துள்ளார் என்று டிடி தெரிவித்துள்ளார்.