ராதா கிருஷ்ணன் பார்த்திபன் என்பவர் தமிழ் திரைப்பட நடிகரும் மற்றும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குநர் கே பாக்யராஜ் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
இவர் முதன் முதலில் புதிய பாதை என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் வைகைப்புயல் வடிவேல் உடன் நிறைய திரைப்படங்களில் வடிவேலுக்கு ஜோடியாக காமெடிகளை வாரி வழங்கியிருப்பார்.
அதற்கு முன் பிரபலங்கள் மீது பெரிய மரியாதை இருக்கும் ஆனால் இப்பொழுது சமூக வலைதளம் வந்த பிறகு நடிகர்களுக்கு இருந்த மரியாதை கொஞ்சம் கூட இல்லை என்று கூறி வருகின்றனர்.
தற்பொழுது இந்த சமூக வலைதளங்கள் வந்த பிறகு நடிகர் நடிகைகளுக்கு நிறைய சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது.
அதிலும் youtube பக்கங்கள் குறித்து சொல்லவே வேண்டாம் இப்பொழுது ஒரு பிரபலம் மரணம் என்றே ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது அவர்தான் நடிகர் மற்றும் இயக்குனர் ஆன பார்த்திபன்.இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
இது குறித்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் நொடிகள் மரணமடைவதும் மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமானால் காரணம் தான் புரியவில்லை இது போன்ற நெகடிவ்வை பரப்பவே நிறைய நண்பர்கள் இருக்கின்றார்கள். மகிழ்ச்சியை மனதில் இறப்புவோம் மக்களுக்கு பரப்பவும்! என்று பதிவு செய்துள்ளார்.
நொடிகள் மரணமடைவதும்,மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! Negativity-ஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம்! https://t.co/JmQqrxFL9K
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 23, 2023