இந்திய நடிகர்கள் வியந்து திரும்பி பார்க்கும் அளவிற்கு பிரமாண்டமான இயக்குனர் என்ற பெயர் பெற்றவர் தான் மணிரத்தினம். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததோடு மட்டுமில்லாமல் அவர் திரைப்படத்தில் எப்படியாவது ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்று பலர் ஏங்கி வருகின்றார்கள்.இப்படிப்பட்ட இவருக்கு உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் தான் நடிகர் சித்தார்த்.
சித்தார்த் சூரிய நாராயணன் திரைப்பட நடிகர் மற்றும் பின்னணி பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்து இவர் தனது இளமைக்கால பள்ளி படிப்பை சென்னையில் படித்து முடித்தார் பிறகு தனது முதல் படமான பாய்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்.
இதன் பிறகு இவருக்கு தமிழில் சரிவர படங்கள் கிடைக்காததால் ஹிந்தி பக்கம் சென்று ஆளை தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டார். பிறகு மீண்டும் தமிழில் நடிக்க தொடங்கினார் கன்னத்தில் முத்தமிட்டாய் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சித்தார்த் மணிரத்தினத்தில் ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.
இதன் பின் தமிழ் மற்றும் தெலுங்கு என்று நடித்து வந்த சித்தார்த் பிறகு இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட் பக்கம் சென்று நடிக்க தொடங்கினார்.அது மட்டும் இல்லாமல் இவர் இணையத்தில் ஆர்டிவாக இருந்து சர்ச்சை கருத்துக்களை கூறி பிரச்சனையில் சிக்கி இருப்பார் தற்பொழுது நடிகை அதிஸ்ரீ ராவ் உடன் ரகசிய காதலி இருந்து வருகின்றார்.
சமீபத்தில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் சினிமாவை விட்டு விலகிச் செல்ல தயார் என்று கருத்து ஒன்றினை தெரிவித்ததோடு காதலியுடன் எங்கு ரகசியமாக சென்றாலும் புகைப்படம் எடுக்கவரும் ரசிகர்களை கோபத்தில் மிரட்டி இருக்கின்றார்.தற்பொழுது பாலிவுட் சினிமாவையே நம்பி நடிகையுடன் மும்பையில் தற்பொழுது செட்டிலாகி வெளியில் தலை காட்டாமல் இருந்து வருகின்றார்.