நடிகர் சரத்குமார் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாட்டாமை இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாகும். இந்த படத்தில் சரத்குமார் இரு வேடங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து இந்த படத்தில் குஷ்பூ, மீனா,விஜயகுமார்,பொன்னம்பலம் ஆகியோர்கள் நடித்திருந்தனர்.இவர்களைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் டீச்சர் காதா பாத்திரத்தில் ராணி நடித்திருந்தார்.நாட்டாமை படம் வெளிவந்தது நாள் முதல் இன்று வரை நாட்டாமை டீச்சர் என்றால் இவர் ஞாபகம் தான் வரும் அந்த அளவிற்கு இவர் நடிப்பு பேசப்பட்டிருந்தது.
அந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளை வந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்து வைத்துக் கொண்டார்.நாட்டாமை படத்தின் மூலம் புகழ்பெற்ற இவர் இந்த படத்தை அடுத்து தமிழ்,தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து வந்தார்.என்னதான் இவர் சரத்குமார் போல முன்னணி நடிகரோட நடித்திருந்தாலும் சமீப காலமாக இவருக்கு எந்த ஒரு படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் ராணி சின்னத்திரை அதாவது சீரியலில் நடிக்க உள்ளாராம்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் சீதாராமன் சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.அதனால் ரசிகர்கள் நாட்டாமை டீச்சர் ரீ-எண்ட்ரிக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ராணி அவர்கள் சீரியலில் தனது நடிப்பை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.