இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் என்ற மாபெரும் வெற்றி படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கான பூஜை டிசம்பர் மாதத்தில் போடப்பட்டு ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வந்தது.
இதை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிப்பது இதுவே இரண்டாவது படமாகும்.தளபதி 67 படத்திற்கான அதிகாரப்பூர்வமான அப்டேட்டை நேத்து படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.இந்த படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்கள் பிப்ரவரி 1,2,3 ஆகிய தேதிகளில் வரும் என படத்தை தயாரிக்கும் நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இந்த படத்தில் அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா அவர்கள் ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.மனோஜ் பரமஹம்சா ஏற்கனவே நடிகர் விஜயின் நண்பன் மற்றும் பீஸ்ட் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மூன்றாவது முறையாக நடிகர் விஜய் உடன் இணைந்துள்ளார்.
இந்த படத்தின் சண்டைக் காட்சிக்காக அன்பறிவு மாஸ்டர், படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜும் சதீஷ்குமாரும் பணியாற்ற உள்ளனர். தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் ரத்னகுமார் மற்றும் தீரஜ் இணைந்து இந்த படத்திற்காக வசனம் எழுதுகின்றனர். மேலும் இந்த படத்திற்கு நடன இயக்குனராக தினேஷ் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார்.
Lokesh, Dinesh Master and #Thalapathy67 Team Spotted at the Airport 🥁pic.twitter.com/upFir9yyZT
— Vijay Team Online (@VijayTeamOnline) January 31, 2023
இது அனைத்தும் நேற்று தளபதி 67 படத்திற்கான அப்டேட் ஆக பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.தொடர்ந்து இன்று நடிகர் விஜய் மட்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி 67 பட குழுவினர் அனைவரும் தனி விமானத்தில் இன்று காஷ்மீருக்கு சூட்டிங் காக சென்றுள்ளனர். அது தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.