லட்சுமி என்ற திரைப்படம் 2018 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது இசை மற்றும் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவும். ஏ எல் விஜய் இதை எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபுதேவா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியவர்கள் இணைந்து நடித்திருந்தார்.
மேலும் சல்மான் யூசூப் கான் மற்றும் கருணாகரன் ஆகியோரும் துணைக் கதாப்பாத்திரங்களில் இப்படத்தில் நடித்திருந்தனர். இவர்களின் மகளாக டித்யா பாந்தே ஒரு முக்கிய இடத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து சூப்பர் டான்சர் சீசன் 1 நிகழ்ச்சியில் டைட்டில் கைப்பற்றிய பின் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
பிரமோத் பிலிம்ஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் பதாகையின் கீழ் பிரதீக் சக்ரவர்த்தி, ஸ்ருதி நல்லப்பா மற்றும் ஆர்.ரவீந்திரன் ஆகியோர் தயாரித்திந்தனர். இப்படத்தின் இசையமைப்பை சாம் சி. எஸ் மேற்கொள்ள ஒளிப்பதிவை நீரவ் ஷா மேற்கொண்டார். 2018 ஆகஸ்ட் 24 அன்று லட்சுமியைக் கொண்டாடும் வரலட்சுமி நோன்பு அன்று வெளியிடப்பட்டது.
இந்த திரைப்படத்தில் பத்து வயதான லட்சுமி தேசிய அளவில் நடனத்தில் முதலிடத்தில் அடைய வேண்டும் என்று கணவுடன் வாழ்கிறார் இதற்கு இவரது தாய் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதையும் மீறி இவர் நடனம் கற்றுக்கொண்டு பட்டத்தை பெற்றாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.
இந்தத் திரைப்படத்தின் மூலம் ஐந்து விழுதுகளை பெற்றிருக்கிறார் டித்யா பாந்தே.தற்பொழுது 16 வயதாகும் இவர் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். அவர் சமீபத்தில் நடனமாடிய ரிலீஸ் வீடியோ பார்த்து ரசிகர்கள் லட்சுமியா இது என ஷாக்காகி கமெண்ட்களில் கூறி வருகிறார்கள்.