விஜய் என்பவர் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் இவர் தனது தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தவர். இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வெற்றி வாய்ப்பை பெற்றவர்.
இவர் நடிப்பில் தற்பொழுது வெளிவந்த வாரிசு திரைப்படமானது சில்ராஜ் தயாரிப்பில் இயக்குனர் வம்சி பயணிப்பள்ளி எழுதி இயக்கிய இந்திய தமிழ் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
இந்தத் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த பொங்கல் ஸ்பெஷல் ஆக திரைக்கு வெளிவந்தது பலவிதமான விமர்சனங்களை வந்த நிலையில் இதையெல்லாம் தாண்டி இந்த திரைப்படம் நல்ல வசூல் வேட்டையை தொடங்கியது.
இந்த திரைப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட மாற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் நல்ல வசூல் பெற்று வந்து கொண்டிருந்தது.வாரிசு திரைப்படம் எப்பொழுது ஓடிட்டியில் ரிலீஸ் ஆகும் என்று நான் ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு தற்பொழுது அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு இருக்கிறது இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி ஓட்டிட்டியில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது இதனால் ரசிகர்கள் எல்லோரும் தற்பொழுது மகிழ்ச்சியே இருக்கின்றார்கள்.