விஜய் ஆண்டனி என்பவர் இந்திய தமிழ்நாட்டின் ஓர் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் அவர் இதனை தொடர்ந்து இவர் தற்பொழுது திரைப்படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.
இவர் முதன் முதலில் சலீம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து இவர் பிச்சைக்காரன், அண்ணாதுரை, காளி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.
தற்பொழுது இவர் பிச்சைக்காரன் 2 என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்த வருகின்றார். இந்த திரைப்படத்தின் மூலம் இவர் தற்பொழுது இயக்குனராகவும் அறிமுகமாகின்றார்.இந்த திரைப்படத்தின் சூட்டிங் லங்கா வே தீவில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது அப்பொழுது இவருக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.
இவர் ஆரம்ப கட்ட சிகிச்சை மலேசியாவில் கொடுக்கப்பட்டு இதன்பிறகு சென்னை தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.சமீபத்தில் இவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் அவரின் உடல் நலம் குறித்து ட்விட்டர் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அன்பு இதயங்களே
நான் 90% குணம் அடைந்து விட்டேன்.
உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.
என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன்😊
வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்🙏
அன்புக்கு நன்றி— vijayantony (@vijayantony) February 2, 2023
இதில் அன்பு இதயங்களே நான் 90% குணமடைந்து விட்டேன் உடைந்து தாடை மற்றும் மூக்கு தற்பொழுது ஒன்று சேருவிட்டது என்னவென்று தெரியவில்லை நான் முன்பை விட தற்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறேன் இதற்கு காரணம் நீங்கள் தான் என்று இன்று முதல் நான் பிச்சைக்காரன் திரைப்படத்தின் வேலையை தொடங்குகிறேன் என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.