சுந்தர் சி தமிழில் தவிர்க்க முடியாத பிரபல இயக்குனர் ஆவார். இவர் ஆரம்பத்தில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக தனது திரைப்பட பணியை தொடங்கினார். 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்னும் படத்தை முதல் முறையாக இவர் இயக்கினார் இதை தொடர்ந்து முறை மாமன்,மேட்டுக்குடி, அருணாச்சலம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் ரஜினிகாந்த், கமலஹாசன், கார்த்தி,பிரசாந்த், அர்ஜுன்,சரத்குமார் ,அஜித் போன்றவர்களின் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.இவர் இயக்கிய அனைத்து படங்களும் குடும்ப படங்களாகவே இருந்து வருகிறது. என்னதான் இவர் குடும்ப படங்களாக இயக்கினாலும் அது வெற்றி படமாக அமைந்து ஒரு வெற்றி இயக்குனராக உருமாறினார்.2014 ஆம் ஆண்டு அரண்மனை என்ற குடும்பம் மற்றும் பேய் திரைப்படத்தை இயக்கி மற்றும் நடித்தும் இருந்தார் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி நடித்தும் உள்ளார் அந்த திரைப்படமும் பெரும் வெற்றி படமாக அமைந்தது.
இதனால் இந்த வெற்றியை நழுவ விடக்கூடாது என்று சுந்தர் சி நடிகர் ஆர்யாவை வைத்து அரண்மனையின் மூன்றாம் பாகத்தை இயக்கினார் இந்த திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாக வெற்றி பெற்று இருந்தாலும் விமர்சனம் ரீதியாக தோல்வி அடைந்தது.தோல்வியை கண்டு மனம் உடைந்ததாக சுந்தர் சி அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை இயக்க உள்ளார் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி பேய் திரைப்படத்தில் நடிப்பதால் யார்ரா இவரு எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் நடித்து விடுகிறார் முதலில் நடிகராக ஆரம்பித்து வில்லனாக மாறி தற்போது பேய் திரைப்படத்திலும் நடிக்கிறார் என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் விதமாக இயக்குனர் சுந்தர் சி யின் பிறந்த நாளும் விழாவில் சந்தானம் விஜய் சேதுபதி ஆகியவர்கள் சுந்தர் சி யின் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோவில் இடம் பெற்றிருந்தார்கள் அதனால் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து அரண்மனை படத்தின் நான்காம் பாகத்துக்கு விஜய் சேதுபதி அவர்கள் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்தப் படத்திற்கு சுமார் 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்க போகிறார் என்று சினிமா வட்டாரங்களால் கூறப்படுகிறது.