ஃப்லோரா சைனி நடிகர் விஜயகாந்த் உடன் 2004 ஆம் ஆண்டு கஜேந்திரா என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமா துறைக்கு அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழைத் திறந்து தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ஃப்லோரா சைனி சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று பேசி சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவர் சிறு வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறேன்.
அதிலும் குறிப்பாக ஹிந்தியில் மட்டும் பத்திற்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். அதன் பின் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை காதலித்தேன். அவரை காதலித்த பிறகு தான் வாழ்க்கை தலைகீழாக மாறியது. அந்த தயாரிப்பாளர் என்னை அடித்து துன்புறுத்தினார். மேலும் எனது கைபேசியை பிடுங்கிக் கொண்டார். என்னை மோசமாக சித்தரவதை செய்தார்.
அவரை காதலித்த பின் 14 மாதங்களுக்கு மேலாக சினிமாவில் நடிக்க முடியாத அளவிற்கு கொடுமைப்படுத்தினார். அதனால் நான் அவரை விட்டு ஓடி வந்து விட்டேன். இப்பொழுது நான் என்னுடைய பெற்றோருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக் குறித்து தற்பொழுது தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.