சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தர்.தற்பொழுது தமிழ் திரைப்பட நடிகராகவும் பாடல் ஆசிரியராகவும் இருந்து வருகிறார் சில படங்களை தயாரித்தும் உள்ளார்.2012 ஆம் ஆண்டு மெரினா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் 3 படத்தில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து எதிர்நீச்சல் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு 2013 ஆம் ஆண்டு ஒரு வெற்றி படமாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற ஒரு படம் அமைந்தது. இந்த திரைப்படத்தின் மூலம் அனைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.
தொடர்ந்து ரஜினி முருகன் ரெமோ போன்ற வெற்றி படங்களில் நடித்து வந்து கொண்டிருந்தார். இப்படி நடித்துக் கொண்டிருந்த இவர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் நடித்திருந்தார் அந்த திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படத்தை நடித்திருந்தார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 100 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இந்த திரைப்படம் தான் சிவகார்த்திகேயன் படத்தில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படமாக அமைந்தது.
டாக்டர் டான் போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்ததால் இனிமேல் நமக்கு வெற்றி தான் என்று பிரின்ஸ் என்ற ஒரு படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாடும் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியை மீண்டும் வெற்றியாக மாவீரன் எனும் திரைப்படத்தில் நடித்து வந்தார்.
மாவீரன் படம் சூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டு வந்தது. இப்படி இருக்கும் நிலையில் மாவீரன் படத்தின் சூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டு சில காட்சிகள் எடுக்க நேரமானதால் இந்த படத்திற்கு பைனான்ஸ் செய்த வந்த அன்பு செழியன் விலகி இருக்கிறார். இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்தவர் வெளியே சென்றதால் என்ன செய்வது என்று தெரியாமல் படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனின் 24 வது படமாக இருக்கும் என அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது இந்த நிகழ்வு நடைபெற்றதால் என்ன நடக்கப் போகிறது அந்த படம் என்ன ஆகப்போகிறது என்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.