நடிகர் அஜித் மற்றும் H.வினோத் கூட்டணி நேர்கொண்ட பார்வை,வலிமை, படத்தை தொடர்ந்து தற்பொழுது துணிவு திரைப்படத்திலும் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர். இந்த திரைப்படம் பல்வேறு வரவேற்பை தொடர்ந்து கடந்த ஜனவரி 11 ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது இது மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இந்தத் திரைப்படத்தை நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை போன்ற திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளனர்.இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் ஜான் கொக்கன், சமுத்திரகனி, மஞ்சு வாரியார் ஆகியோர்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் அவர்கள் ஒரு கேங்ஸ்டர் ஆகவும், சமுத்திரகனி போலீஸ் ஆபீஸர் ஆகும் நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தில் வங்கியில் நடக்கும் ஊழலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூபாய் 112 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் உலக அளவில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டு வருகிறது.
இந்த திரைப்படத்தை வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் H.வினோத்தின் அப்பாவை திரையரங்கிற்கு அழைத்து சென்று திரையரங்கு உரிமையாளர்கள் அவருக்கு மரியாதை செய்துள்ளனர். இந்த செயல் இந்த படத்திற்கு வெற்றிக்கு வெற்றி சேர்க்கும் விதமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித்தின் ரசிகர்கள் இதுதான் துணிவு படத்திற்கு கிடைத்த உண்மையான வெற்றி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
நடிகர் அஜித் அவர்கள் துணிவு படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் Ak 62 படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் இவருடன் காமெடி நடிகர் மற்றும் நடிகருமான சந்தானமும் மற்றும் அரவிந்த்சாமி நடிக்க உள்ளார். தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் இந்த திரைப்படத்தின் கதாநாயகியை தேர்வு செய்து கொண்டு வருகிறார்.
இந்த இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசையமைக்க உள்ளார். திரைப்படத்தை பிரபல லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.