நடிகர் தனுஷ் தற்பொழுது படங்களில் நடிப்பது இயக்குவது போன்ற பணிகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் இவர் நடித்த மாறன், தி கிரே மேன் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை இவருக்கு கொடுக்கவில்லை. தொடர்ந்து திருச்சிற்றம்பலம்,நானே வருவேன் போன்ற படங்களில நடித்திருந்தார் இதில் திருச்சிற்றம்பலம் இவர்கள் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
இதைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தெலுங்கில் சார் எனவும் தமிழில் வாத்தி எனவும் பெயரிடப்பட்ட படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.
திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்படுவதாக இருந்த நிலையில் சில காரணங்களால் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.அதன்படி இந்த படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
எண்ணம் போல் வாழ்க்கை ❤️#Vaathi Audio Launch On February 4th 🥳 pic.twitter.com/KksmM04Hut
— Ayyappan (@Ayyappan_1504) February 1, 2023
வாத்தி படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படத்தில் இருந்து வா வாத்தி எனும் பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் வெளிவர இன்னும் 15 நாட்களே மட்டும் இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 4 தேதி சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடத்தப்பட உள்ளனர்.
நடிகர் தனுஷ் வாத்தி படத்தை தொடர்ந்து கேப்டன் மில்லர் எனும் திரைப்படத்தில் நடித்த வருகிறார். தனுஷின் ரசிகர்கள் வாத்தி படத்தை விட கேப்டன் மில்லர் படத்தை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் சன் பிக்சர் தயாரிப்பில் இயக்கி நடிக்க உள்ளாராம்.இதுவரை தனுஷ் நடித்த படங்களை விட இந்த படத்திற்கு அதிக பட்ஜெட் எனவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.