சமந்தா என்பவர் இந்திய திரைப்பட நடிகை மற்றும் உரு மாதிரி கலைஞரும் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அதிகமாக நடித்த வருகின்றார். தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவருக்கு இந்த திரைப்படத்திற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகை பிலிம் பேர் விருதை பெற்றார்.
இந்தத் திரைப்படத்திற்கு பிறகு பிருந்தாவனம், தூக்குடு, கத்தி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவருடைய அழகும் துல்லியமான நடிப்பும் இவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் வைத்திருக்கின்றனர்.கடந்தாண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் இவர் ஓ சொல்றியா ஓ சொல்றியா சொல்றியா மாமா என்ற பாடலுக்கு இவர் நடனமாடி ரசிகர்களை உலக அளவில் கவர்ந்து விட்டார்.
அதிலிருந்து இவரை தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக இருந்த நயன்தாராவுக்குப் பிறகு தற்பொழுது கொடிகட்டி பறக்கும் நடிகையாக இவர் திகழ்கின்றார்.
இவருக்கு தற்பொழுது சமீப காலமாக மையோசிடிஸ் என்ற அரிய வகை நோய் இருந்ததால் பல மாதங்கள் நடக்கக்கூட முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்.
இதற்கிடையில் யசோதா, குஷி, சகுந்தலம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் கமிட் ஆகி நடித்த வருகின்றார்.
இவர் தன்னுடைய உடல் நிலைக்கு சமீபத்தில் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று பாலிவுட்டில் நடிக்க உள்ள திரைப்படத்தில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தற்பொழுது பழையபடி உடற்பயிற்சி செய்து கடினமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பார்க்கும் விதத்தில் பதிவிட்டு இருக்கின்றார். இதனை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.