தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் பல திரைப்படங்களில் நடித்து தற்பொழுது முன்னணி காமெடி நடிகர் என்று திகழ்ந்து வருபவர் தான் நடிகர் யோகி பாபு. இவர் பெரிய பட்ஜெட் மற்றும் சிறு பட்ஜெட் திரைப்படங்களில் இவர் நடித்தால் போதும் என்று பல பேர் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கிறார்கள்.
இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகப் பெரிய பங்காற்றி இருப்பார். இந்த நிலையில் அடுத்த திரைப்படங்களில் கால்ஷீட் பிஸியாகவும் அளவிற்கு திரைப்படங்கள் நடித்து வருகின்றார்.
இவர் நடிப்பில் தற்பொழுது பொம்மை நாயகி என்ற திரைப்படம் வெளியாக போகிறது இது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார் நடிகர் யோகி பாபு.
இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய யோகி பாபுவிடம் பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் பிரமோஷனுக்கு மட்டும் செல்கிறீர்கள் சிறிய பட்ஜெட் திரைப்படங்களின் ப்ரோமோஷனுக்கு செல்வதில்லை என்று கேள்வி எழுப்பினார்கள் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள்.
இதற்கு கோபப்பட்ட யோகி பாபு யார் நீ இந்த படமும் சிறு பட்ஜெட் படம் தான் என்று கூறினார் பிறகு வாரிசு படம் பெரிய பட்ஜெட் தான் ஆனால் அந்தத் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் இருக்கும் இதே திரைப்படங்களின் ஆடியோ லான்ச் செல்லவில்லையே என்று கூறினார்.
'எனக்கே நீ சொல்லி தான் தெரியும்🤣' – Yogi Babu Speech
▶️VIDEO: https://t.co/pRGp6zbd5W@iYogiBabu #YogiBabu #BommaiNayagi #PaRanjith #Varisu #ThalapathyVijay𓃵 #Cineulagam pic.twitter.com/PQLFdYie7T
— Cineulagam (@cineulagam) January 30, 2023
இதனைத் தொடர்ந்து மேலும் எல்லா இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தெரியும் என்னுடைய சூழ்நிலை எப்படி என்று நானும் சின்ன நடிகராக இருந்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்று பதிலடி கொடுத்திருக்கின்றார் யோகி பாபு.