கார்த்தி நடிப்பில் 2010 ஆண்டு பையா என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. இந்த திரைப்படம் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் தமன்னா நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் தமன்னா பெங்களூரில் இருந்து மும்பைக்கு காரில் செல்கிறார்கள் அப்போது இடையில் இவர்களுக்கு ஏற்படும் தடைகள் மற்றும் இவர்களின் கடந்த காலம் வாழ்க்கையை பற்றி கதையாக அமர்ந்திருந்தது. தொடர்ந்து இந்த படத்தில் அமைந்திருந்த அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது. குறிப்பாக இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளதால் இந்த படத்திற்கு உள்ள பாடல்களுக்கு தனி மதிப்பு உண்டாகியுள்ளது.
இந்த திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடியது. இந்த திரைப்படம் வெளிவந்து 12 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இயக்குனர் லிங்குசாமி அவர்கள் நடிகர் ஆர்யாவை வைத்து பையா 2 என்ற படத்தை இயக்க உள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. பையா 2 படத்திற்கான முதல் கட்ட பணியில் பட குழுவினர் இறங்கி உள்ளனர்.
அதன்படி இந்த படத்தில் நடிகர் ஆர்யா நடிகராகவும் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூர் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தயாரிப்பாளர் போனிகபூர் அவர்கள் தமிழின் முன்னணி நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை,துணிவு போன்ற படங்களை தயாரித்து உள்ளார். அதைத் தொடர்ந்து அவரது மகள் தமிழில் படம் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்து வந்தார்.
அந்த வகையில் இவரை பையா 2 படத்தில் நடிக்க சம்மதிப்பார் என தற்பொழுது தகவல்கள் பரவி வருகின்றது அதை தொடர்ந்து இவரின் தந்தை போனிக்கபூர் அவர்கள் அந்த செய்திகள் எதுவும் உண்மை இல்லை என்று தற்பொழுது போனி கபூர் ட்வீட் செய்துள்ளார்.