விஜய் சேதுபதி தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் ஆவார். இவர் தமிழில் முதன்முதலாக தென்மேற்கு பருவக்காற்று நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடிதான், சேதுபதி, 96 போன்ற பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் இவர் இரண்டு தென்னிந்திய ஃபிலிம் பெயர் விருதுகள் மற்றும் 3 விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றிருக்கின்றார்.
தற்பொழுது விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் அடுத்து நம்பிக்கை நட்சத்திர நடிகராக திகழ்ந்து வருகின்றார்.
இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் சமீப காலமாக இவருடைய திரைப்படங்கள் தொடர் தோல்வி அடைந்து வருவதால் இவருடைய மார்க்கெட் கடும் வீழ்ச்சியடைந்து இருக்கின்றது.
இதனால் இவர் தற்பொழுது ஒரு சீரியலில் மற்றவருக்கு பதிலாக இவர் வாய்ஸ் கொடுக்கும் ஒரு காட்சி வந்திருக்கின்றது. இந்த செய்தி ரசிகர்களிடையே ஒரு கலங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு சிலர் “சார் நீங்கள் இதையும் விட்டு வைக்கலையா… என்று கலாய்த்து வருகின்றனர்.
இந்த மனசு-ku தான் மக்கள் செல்வன்-nu சொல்றாங்க…!❤️🔥 @VijaySethuOffl
நினைத்தாலே இனிக்கும் | திங்கள் – சனி | இரவு 7.30 மணிக்கு.#NinaithaleInikkum #Bommi #Siddharth #Swathi #Anand #Zeetamil #Zeetamilpromo #promo pic.twitter.com/ZPL4qhQfQt
— Zee Tamil (@ZeeTamil) January 25, 2023