தமிழில் பல்வேறு படங்கள் நடித்து சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்துடன் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த எனும் திரைப்படம் வெளிவந்தது. அந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் இயக்கியிருந்தார் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாவும் தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். திரைப்படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்ய பட குழுவினர் முடிவு எடுத்திருக்கிறது.
இன்று வரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தில் இருக்கும் ரஜினிகாந்த் அவர்கள் தனது மாஸ் குறையாமல் இருந்து வருகிறார்.இப்படி இருக்கும் நிலையில் அவர் எந்த ஒரு விழாவில் கலந்து கொண்டாலும் தனது ரசிகர்களுக்காக ஓரிரு வார்த்தைகள் பேசுவார். அந்த வகையில் தற்பொழுது தன்னைப் பற்றியும் தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களை பற்றியும் உடைத்து கூறினார். அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் அவர்கள் ஒரு மேடையில் தனக்கு மூன்று கெட்ட பழக்கங்கள் இருந்தது சிகரெட் குடிப்பது, மது அருந்துதல், அசைவம் சாப்பிடுவது என குறிப்பிட்டிருந்தார்.இந்த மூன்று பழக்கங்கள் இருந்தால் 60 வயதுக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டார்கள் அதையும் மீறி இருந்தால் படுத்த படுக்கையா தான் இருப்பார்கள் எனக் கூறியிருந்தார்.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள் மது அருந்துதல் சிகரெட் பிடிப்பது பழக்கம் இருந்தால் நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்ளலாம் ஆனால் அசைவம் சாப்பிடுவது ஒரு கெட்ட பழக்கம் என்று ஒப்புக்கொள்ள முடியாது.அது மட்டுமல்லாமல் உலகத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது அசைவம் மட்டும்தான் அதை சாப்பிட்டால் உயிரிழந்து விடுவார்கள் என்று கூறுவது ஒரு முட்டாள்தனம் என்று கூறுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இதை விட்டதால் நன்றாக இருக்கிறேன் என கூறிய ரஜினிகாந்த் எதற்காக சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அசைவம் சாப்பிடுவது கெட்ட பழக்கம் எனக் கூறிய ரஜினிகாந்த் சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். அவர் கூறிய அந்த கூற்றுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.