பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு படம் ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இந்த இரண்டு தமிழகத்தில் மிகப் பெரும் வசூல் விளையாட்டை நடத்தி வருகிறது இப்படி இருக்கும் நிலையில் தற்போது கேரளாவில் யார் படம் வசூல் அதிகம் யார் படம் தோல்வி என்ற பட்டியல் வெளியாகி உள்ளது.
இவர்களின் இரு படம் வெளி வந்தால் கதை நல்லா இருக்கிறதோ இல்லையோ படம் பெரிய வசூல் செய்துவிடும் எனும் நம்பிக்கை வைத்து அனைத்து விநியோகஸ்தர்கள் இவர்களின் படங்களை வாங்கி வெளியிடுகிறார்கள் அவர்களின் நம்பிக்கை வீண் போகாமல் இவர்களின் படமும் வசூல் வேட்டை செய்து விடுகிறது.
அந்த வகையில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளிநாடுகளில் பிரபல லைக்கா நிறுவனம் வெளியிட்டனர். இவர்களின் நம்பிக்கை வீண் போகாமல் துணிவு திரைப்படம் தமிழகத்திலும் மற்றும் வெளிநாட்டில் நல்ல வசூலை பெற்றது. இதே போலவே நடிகர் விஜய்யின் வாரிசு செவன் ஸ்கிரீன் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டது இந்த திரைப்படமும் வசூல் வேட்டையை செய்து கொண்டு வருகிறது.
தற்பொழுது கேரளாவில் படமும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது அந்த வகையில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் ரூபாய் 1.25 அஜித்தின் துணிவு ரூபாய்10 லட்சம் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது இருவரின் படங்கள் திரையரங்க காட்சிகள் முடிவுக்கு வருகின்ற என கூறப்படுகிறது.கேரளாவில் விஜயின் ரசிகர்கள் அதிகமாக உள்ளதால் விஜயின் படம் நன்றாக ஓடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக கேரளாவில் நடிகர் விஜயின் திரைப்படமும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
#Varisu Expecting loss in Kerala – ₹1.25 CR & #Thunivu – ₹10 Lakhs!!
Kerala theatrical business already in closing stage!!
— Kerala Box Office (@KeralaBxOffce) January 25, 2023
கேரளாவில் நஷ்டத்தை சந்தித்தாலும் இருவரின் படமும் தமிழில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்தும் வேறு எந்த முன்னணி நடிகர் படங்கள் வெளிவராததால் இவர்களின் படம் இன்னும் வசூல் வேட்டையை தமிழகத்தில் செய்து கொண்டிருக்கிறது.