யோகி பாபு ஆரம்பத்தில் காமெடி நடிகராக தனது நடிப்பை வெளிப்படுத்தி தற்பொழுது முன்னணி நகைச்சுவை நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் அனைவருக்கும் படங்களிலும் இவரை காண முடிகிறது. இவரின் கால் சீட்டுக்காக பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நகைச்சுவை நடிகராக நடித்தவரும் யோகி பாபு கூர்க்கா திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.அதைத் தொடர்ந்து கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாகவே நடித்து விட்டார். தொடர்ந்து சமீபத்தில் வெளியான மண்டேலா திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.அதன் பிறகு தற்போது ஹீரோ கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் பொம்மை நாயகி என்னும் திரைப்படம் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அந்தப் படத்தில் யோகி பாபு மனைவி மற்றும் மகளுடன் வாழும் ஒரு சராசரி குடும்ப தலைவனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் தனது குழந்தை காணாமல் போய்விடுகிறது அந்த குழந்தையை கண்டுபிடிக்கும் ஒரு சராசரி தந்தையாக நடித்திருக்கிறார்.
தொடர்ந்து தற்பொழுது யோகி பாபின் அடுத்த படத்தின் அப்டேட் ஒன்னு வெளியாகி உள்ளது. அந்தப் படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் யோகி பாபின் 200 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு மெடிக்கல் மிராக்கள் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது twitter பக்கத்தில் யோகி பாபு வெளியிட்டுள்ளார்.
இந்த திரைப்படத்தை இயக்குனர் ஜான்சன் இயக்குகிறார். ஜான்சன் ஏற்கனவே நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவந்த ஏ1,பாரிஸ் ஜெயராஜ் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். மெடிக்கல் மிராக்கள் படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை முக்கியத்துவம் கொடுக்கும் படம் எனக் கூறப்படுகிறது. அவர் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் யோகி பாபு சுற்றி கத்தி,கடிகாரம்,ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ்,ஊசி கல்,காலண்டர் போன்றவை இருப்பதால் இது ஒரு வித்தியாசமான காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.