பிரேம்குமார் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர் தற்போது தமிழ் திரைப்படங்களில் முக்கிய இடங்களில் நடித்து வருகிறார்.ஆரம்ப காலங்களில் சேவல், சாட்டை, பிரியாணி போன்ற படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
தற்பொழுது பிரேம்குமார் சமீபத்தில் வெளியாகிய நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் வங்கியின் மேனேஜராக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் பிரேம் குமார் நடிகர் அஜித்தை குறித்து நெகிழ்ச்சியான தருணங்களை அவருடன் துணிவு படத்தில் நடிக்கும் போது நடந்த விஷயங்களை பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அதாவது நடிகர் அஜித் அவர்கள் நடிகர் சங்க நிகழ்ச்சிக்கு தனது மனைவி ஷாலினி உடன் காரில் வந்திருந்தார். நடிகர் அஜித் முன்னணி நடிகர் என்பதால் அவரது மனைவி முன்னணி நடிகை என்பதால் அவர்களை திடீரென பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.
அப்போது காரில் இருந்து இறங்கிய நடிகர் அஜித் அந்த பக்கம் சென்று தனது மனைவிக்காக கார் கதவை திறந்து கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். இதெல்லாம் உண்மையிலேயே ரொம்ப பெரிய விஷயம் என்றும் அதன் பிறகு நாங்கள் சூட்டிங்கில் இருக்கும் பொழுது என்னுடைய மனைவி ஒருநாள் அஜித்தை பார்ப்பதற்காக வெளியூரில் இருந்து வருவதாக சொன்னார். நான் அதை நடிகர் அஜித்திடம் சொன்ன போது அவர் உடனே அவர்கள் எப்ப வருவாங்க? பத்திரமாக வந்துவிடுவார்களா? இன்று என்னிடம் என் மனைவி வரம் வரை அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தார்.
இதெல்லாம் இப்போது நினைத்தால் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. உண்மையிலே கேரிங் விஷயத்தில் நடிகர் அஜித்தை அடித்துக் கொள்ளவே முடியாது என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார்.